நம்முடைய பிரச்சனையை நம்மால் மட்டுமே தீர்க்க முடியும் !!!
நாம் பிறக்கும் பொழுது நமக்கு தேவையான அனைத்தையும் இந்த இயற்கையால் /கடவுளால் நமக்கு ஒரு பேக்கஜ் ஆக கொடுக்கப்பட்டது . ஆனால் இப்பொழுது இருக்கும் அணைத்து பிரச்சனைக்கும் நாம்தான் காரணம். நமக்கு பிரச்னை உடல்,மனம் ,உறவு மற்றும் பணம் இவைகளில்தான் பெரும்பாலும் காணமுடிகிறது .
பிரச்சனைக்கு முக்கிய காரணம் போதுமான வாழ்க்கை கல்வி இல்லாததே. பெரும்பாலும் பள்ளியிலும் கல்லூரிலும் இவற்றைப்பற்றி கற்றுக்கொடுப்பதே இல்லை..நாற்பது ஆண்டுக்கு முன்னால் நல்லொழுக்கம் என்ற வகுப்பில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி, மனதை பக்குவப்படுத்துவது எப்படி, நல்லுறவை மேம்படுத்துவது எப்படி, பணத்தை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தார்கள் . போதுமான அளவிற்கு வாழ்க்கைக்கல்வி இருந்ததால் பிரச்னை வந்தாலும் எப்படி கையாள்வது என்ற பயிற்சி இருந்ததால் ஆரோக்கியமாக வாழ முடிந்தது.எண்ணங்களும் தூய்மையாக இருந்தது.எண்ணம் போல் வாழ்க்கையும் அமைந்தது .இப்பொழுது நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டதால் உடலில் ,மனதில் உறவில் மற்றும் பணத்தில் பிரச்னை அதிகமாகிவிட்டது. இந்த பிரச்சனைக்கு காரணம் நாம் தான் நம்முடைய வாழ்க்கை முறைதான்.
ஆனால் இப்பொழுதெல்லாம் ஆலயத்தில் அதிக மக்கள் கூட்டம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத என்று ஏங்கும் நிலையில் இருக்கிறார்கள் .பக்தியை விட பயத்தினால் ஆலயத்திற்கு செல்லும் அவல நிலை அதிகமாக உருவாகிவிட்டது.என்னதான் ஆலயத்தில் உருகி விரதம் இருந்து கோரிக்கை வைத்தாலும் நிச்சயமாக நம பிரச்சனையை கடவுள் தீர்க்க மாட்டார் என்று ஏன் விளக்கவில்லை என்று தெரியவில்லை ஆலயத்தில் இருக்கும் கடவுள் நம் பிரச்சனையை தீர்த்துவைக்கும் ஏஜென்ட் அல்ல.நம்முடைய பிரச்சனையை அவர் கொடுத்தது இல்லை நாமே தேடிக்கொண்டதுதான்.
ஆலயத்தில் எனர்ஜி ஏராளமாக இருக்கிறது அதை அடைய முயற்சித்தால் ஓரளவு நமக்கு எண்ணதில் தெளிவு கிடைக்கும்.புத்தி நன்றாக வேலைசெய்யும்நம் உடம்பில் உள்ள சுரப்பிகள் நன்றாக சக்தியூட்டப்பட்டு ஆரோக்கியம் ஏற்படும்.
அப்படியென்றால் பிரச்சனையில் இருந்து விடுபடுவதான் எப்படி ?
ஒரு தாளை எடுத்துக்கொண்டு உங்கள் அணைத்து பிரச்னைகளையும் பட்டியல் இடுங்கள் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று நீங்களே எழுதுங்கள்.பிறகு கண்ணைமூடி பிரச்னை தீர்ந்து விட்டால் எப்படி மகிழ்வீர்கள் என்று கற்பனை செய்யுங்கள் மீண்டும் மீண்டும் மகிழ்வான கற்பனையை நினைத்து பாருங்கள் .இந்த தருணத்தில் உங்கள் மனமானது விழிக்கவும் இல்லை தூங்கவும் இல்லை என்ற தியானநிலையை பின்பற்றி கற்பனை செய்யுங்கள். இதுபோல்தான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வை கற்பனை செய்து வந்தீர்களேயானால் விரைவில் உங்கள் பிரச்னை தீரும் .எதைப்பற்றி நீங்கள் தீவிரமாக நினைக்கிறீர்களோ அது உங்கள் ஆழ்மனதில் பதிந்து அதை கண்டிப்பாக ஆழ்மனது செயல்படுத்திவிடும் இதுதான் பிரச்சனையை தீர்க்க வழிமுறை .நீங்கள் சதா பிரச்சனை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் பிரச்சனையை தான் ஈர்ப்பீர்கள் . தீர்வை பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் தீர்வை ஈர்ப்பீர்கள் .
இதுதான் பிரபஞ்ச இரகசியம்.
வாழ்க்கை வாழ்வதற்கே !!!
மகிழ்வோடு இருங்கள் !!!
அன்புடன்
Energ Elango K
9444002994